மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில், மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை நடைபெற உள்ளது.
ஆற்காடு அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை இந்த வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில், 150க்கும் மேற்பட்ட முன்னணித் தனியார் நிறுவனங்கள் பங்கேற்று 10,000ற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளன.
0 Comments